2 ஆண்டுகள் கழித்து ஏன்? ஈஷா அறக்கட்டளை வழக்கு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
ஈஷா அறக்கட்டளை வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஈஷா அறக்கட்டளை
ஈஷா யோகா மையத்தில் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியன்றி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததில், “தமிழக அரசு 2 ஆண்டுகள் கழித்து இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருப்பதன் நோக்கம் என்ன, உரிய நேரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகாதது ஏன்?
நீதிமன்றம் கேள்வி
அரசின் இந்த செயல்பாடுகள் சந்தேகத்தை எழுப்புகிறது என நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் கேட்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பிஎஸ் ராமன், இந்த விவகாரத்தில் இரு துறைகள் விவாதிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டன என்றார்.
பின் ஈஷா அறக்கட்டளை சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி 20% கட்டிடத்தையும் 80% இயற்கை அம்சங்களுடன் யோகா மையம் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த யோகா மையங்களில் சிறந்ததாக உள்ளது. சிவராத்திரி விழாவை ஒட்டி விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், தமிழக அரசு தரப்பிலும் இந்த வழக்கிற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 28 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.