ஆளுநராக மீண்டும் ஆர்என் ரவி வரக்கூடாது - அமித்ஷாவுக்கு பறந்த பரபர கடிதம்!
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆளுநர் ஆர் என் ரவி
கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழக ஆளுநராக ஆர் என் ரவி நியமிக்கப்பட்டார். அவரின் பதவிக்காலம் ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
அடுத்த ஆளுநர் நியமிக்கப்படும் வரை அவரது பதவி நீட்டிக்கப்படலாம், அல்லது மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்படலாம். இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
வழக்கறிஞர் கடிதம்
ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சென்னை உயர் நீதிமன்றமத்தின் மூத்த வழக்கறிஞர் என் துரைசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், ஒருவேளை ஆர் என் ரவி மீண்டும் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட இருந்தால் அது அரசியலைமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. இரண்டாவது முறையாக ஆர் என் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டால் வழக்கு தொடரப்படும். புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை ஆர் என் ரவியே பதவியில் தொடருவதற்கான திட்டம் இருக்கிறதா?
ஆர் என் ரவிக்கு பிறகு புதிய ஆளுநர் நியமிக்கப்படுவதற்கான திட்டம் இருக்கிறதா? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.