ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா - ஆளுநர் ஒப்புதல்!
ஆன்லைன் விளையாட்டின் தமிழக அரசின் தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் தடை சட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் அதற்கான ஆணையை வெளியிட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்பட்ட பின்னர் தமிழ்நாட்டில் எந்த நபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட முடியாதவாறு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களுக்கு, எந்த ஊடகங்களிலும், செயலிகளிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களுக்கு இதன் மூலம் தடை விதிக்கப்பட்டது.
ஆளுநர் ஒப்புதல்
இதற்கான மசோதா கடந்த 19ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வருகிறது.