கல்வியின் முக்கியத்துவம் - மலைவாழ்மக்களுக்கு தமிழக ஆளுநர் கொடுத்த அட்வைஸ்!
கல்வியின் முக்கியத்துவம் குறித்து பிள்ளைகளுக்குப் பெற்றோர் எடுத்துரைக்க வேண்டும் என மலைவாழ்மக்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை வழங்கினார்.
தமிழக ஆளுநர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலையில் மலைவாழ் மக்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலைவாழ் மக்கள் வரவேற்பு அளித்தனர்.இதையடுத்து ஜவ்வாது மலையில்லைசெயல்படுத்தப்படும் அரசின் திட்டக் கண்காட்சி அரங்கை அவர் பார்வையிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் ,'' மலைவாழ் மக்களிடையே கல்வி குறித்தான விழிப்புணர்வு அதிகம் இருக்க வேண்டும்.பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும். கல்வியின் முக்கியத்துவம் குறித்து பிள்ளைகளுக்குப் பெற்றோர் தெரிவிக்க வேண்டும்.
கல்வி
பெற்றோராகிய நீங்கள், ஒருஇடத்தில் படிப்பை நிறுத்தினாலும், உங்களுடைய பிள்ளைகள் படிப்பை நிறுத்தாமல் படிக்க வேண்டும்.
எதிர்காலம் சிறப்பாக இருக்கப் பிள்ளைகள் கட்டாயம் படிக்க வேண்டும். ஜவ்வாது மலை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஜவ்வாதுமலைக்கு மீண்டும் மீண்டும் வருவேன்" என்று கூறினார்.