ரூ.6,000 வெள்ள நிவாரணம்; எங்கே பெற்றுக்கொள்ளலாம் - முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு!
நிவாரணம் வழங்கும் பணியை முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார்.
நிவாரணம்
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் ரூ.4 லட்சத்தில் இருந்து, ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூ.5 ஆயிரத்தை, ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்தனர்.
டோக்கன் பணி
இதனையடுத்து, நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் நிவாரண தொகைக்கான, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து, நிவாரணம் வழங்கும் பணியை நாளை(டிச.17) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், சர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள், வருமான வரி செலுத்துவோர் நியாயவிலைக் கடைக்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.