உருக்குலைந்த தூத்துக்குடி; குவியும் கண்டனங்கள் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை
மழை வெள்ள பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்யவுள்ளார்.
வெள்ள பாதிப்பு
தென் மாவட்டங்களில் 100 ஆண்டுகளுக்குப் பின் பெருமழை வெள்ளம் கொட்டித் தீர்த்தது. இதனால், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன.
குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அரசு முழு வீச்சில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் ஆய்வு
இதனையொட்டி, டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதியாக ரூ12,000 கோடி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மேலும், தமிழ்நாட்டு பேரழிவை தேசிய பேரிடராக அறிவிக்கவும் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டு பேரழிவை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்றார். இதற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு வரும் 26-ந் தேதி நிர்மலா சீதாராமன் வருகை தருகிறார். தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.