தமிழக அரசை கலாய்த்த அனிதா சம்பத் - தொக்காக மாட்டிய சம்பவம்!
அனிதா சம்பத் வீடியோ வைரலான நிலையில் வதந்தியை பரப்பாதீர்கள் தமிழக அரசு என எச்சரிக்கை செய்துள்ளது.
அனிதா சம்பத்
கொழுமணிவாக்கம் ஊராட்சியில் உள்ள கோயில் குளம் படிக்கட்டு கட்டட செலவு குறித்து அனிதா சம்பத் பேசியிருந்த வீடியோ வைரலான நிலையில் அது உண்மையில்லை என தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
தொகுப்பாளரும் ,செய்திவாசிப்பாளருமான அனிதா சம்பத் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பேசுபொருளானது. அந்த வீடியோவில் “நான் வந்து மாங்காடு பக்கத்தில் இருக்கிற கொழுமணிவாக்கம் என்ற இடத்தில் இருக்கேன்.
இங்க ஒரு போர்டு போட்டு இருக்காங்க. இந்த போர்ட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்; அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்; கொழுமணிவாக்கம் ஊராட்சி;
திருக்குளத்திற்கு நடைபாதை, படிகட்டு மேம்பாட்டு பணி; மதிப்பீடு ரூ. 11.36 லட்சம் என போட்டுருக்காங்க. இந்த படிகட்டை பாருங்க. இதை போட 11 லட்சம் ரூபாய் ஆகுமா? இந்த பணத்தில் வீடே கட்டுறாங்க. நானும் சுத்தி எதாவது கட்டியிருப்பாங்கன்னு தேடி பார்த்தேன்.
வதந்தி
ஆனால் எங்கேயும் எதுவும் கிடையாது. இந்த ஒரு படிக்கட்டுக்கு எதுக்கு இவ்வளவு பணம்” என கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ,''விளக்கம் அளித்துள்ளது.
அதில், கொழுமணிவாக்கம் ஊராட்சியில் உள்ள கோயில் குளத்தில் படிக்கட்டு கட்ட ரூ.11 லட்சம் செலவிடப்பட்டதாக அனிதா சம்பத் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்படுகிறது. இது பொய் செய்தி என்று தெரிவித்து கொழுமணிவாக்கம் ஊராட்சியில் உள்ள கோயில் குளத்தில் படிக்கட்டு கட்ட செலவினங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளது.