சென்னையை பார்க்கவே பயமா இருக்கு - அனிதா சம்பத் வேதனை
ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அனிதா சம்பத் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் வெளியே பேசிக்கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷ் என்பவரின் தம்பி பாலு உள்ளிட்ட 8 பேர் நேற்று நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்தார்கள். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
அனிதா சம்பத்
தற்போது இது குறித்து அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, நான் காலேஜ் படிச்ச காலத்துல இருந்தே பெரம்பலூரில் தான் இருக்கேன். வீட்டுக்கு வரும்போது எல்லாம் எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். வட சென்னை எனக்கு அவ்வளோ பிடிக்கும்.
ஆனா இப்போ நம்ம ஊர பாக்குறதுக்கு எனக்கு பயமா இருக்கு. நேற்று இரவு ஆம்ஸ்ட்ராங் சார் நியூஸ் கேட்டதிலிருந்து சென்னையை பாக்குறதுக்கு ரொம்ப பயமா இருக்கு. ஒரு தேசிய கட்சியின் தலைவரு. அவரை ஒரு 6 பேர் அசால்டா வந்து வெட்டி போட்டுட்டு போயிருக்காங்க. இந்த தைரியம் எங்க இருந்து வந்தது. ஆல்ரெடி அவரை இழந்தாச்சு அதுவே அநியாயமான விஷயம்னு மனசு பதறுது.
அரெஸ்ட்
அடுத்து என்ன தோணுதுன்னா இதுக்கு பிறகு ஒரு ஆறு பேரை அரெஸ்ட் பண்ணிட்டு அதை நியூஸ்ல காட்டுவாங்களா, அதுவாவது நிஜமா அவரை வெட்டுனவங்க ஆறு பேரு தானா இல்லனா வேற யாராவது ஆறு பேரை கூட்டிட்டு வந்து சரண்டர் பண்ண வைப்பாங்களான்னு இன்னொரு பக்கம் பயமா இருக்கு.
ஒருவேளை இவங்க அரெஸ்ட் பண்ணுனாகூட இவங்க தான் ஆம்ஸ்ட்ராங்க வெட்டி கொன்னது என்று எப்படி நம்புவது? பிளான் பண்ணி அவர் பக்கத்தில் ஆட்கள் யாரும் பெருசா இல்லாம கொலை செஞ்சிருக்காங்க. இது கண்டிப்பா நியூஸ்ல வரும்... பெரிய விஷயமா ஆகும்னு தெரிஞ்சும் இப்படி பண்ணிருக்காங்கன்னா இது பிளானிங் இல்லாமையா இப்படி பண்ணி இருப்பாங்க?
மகாராஜா
மகாராஜானு ஒரு படம். அந்த படத்தில் ஒரு குப்பை தொட்டி காணாமல் போகும் ஆனால் அது ஒரு குப்பைத்தொட்டி என்பது சின்ன விஷயமாக இருக்கலாம் ஆனால் அந்த படத்தில் போலீஸா இருக்கும் நட்டி சார் ஒவ்வொரு அக்யூஸ்டுக்காக போன் பண்ணி நீ இந்த கேஸ்ல ஆஜர் ஆகுறாயானுகேட்பார். சின்ன கேஸுக்கே யாரோ பண்ணுனதுக்கு ஆள் கிடைக்கவில்லை என்று சொல்லி யாரோ ஒத்துக்க போறாங்கன்னா இவ்வளவு பெரிய கேஸ் முன்னாடியே பிளான் பண்ணி மர்டர் பண்ணி இருக்கீங்க அப்போ அதுல ஒரு ஆறு பேரை சரண்டராக வைக்கலாம்னு பிளான் பண்ணாமலா இவ்வளவு பெரிய கொலையை பண்ணி இருப்பாங்களானு மனசு பதறுது.
நிஜமாவே கொலைகாரங்கன்னு ஆறு பேரை கூட்டிட்டு வந்தா கூட நம்ப முடியாது. ஆம்ஸ்ட்ராங் பெரிய கட்சியில் இருந்திருக்காரு பக்கத்தில் அத்தனை பேரும் இருந்திருக்காங்க அவருக்கே இந்த நிலைமைனா சாதாரணமாக வீட்டில் இருக்கிறவங்க, சிங்கிள் பேரன்ட்டா இருக்கிறவங்க, குழந்தையை வச்சுக்கிட்டு இருக்குறவங்க, வெறும் வயசானவங்க மட்டும் இருக்கிறங்க வீடு இவங்க எல்லாம் இனி எப்படி வாழுவாங்க? பெரிய ஆள்களுக்கு இந்த நிலைமைனா எங்களை மாதிரி சாதாரண மக்களோட நிலைமை என்ன? என அனிதா சம்பத் பேசியுள்ளார்.