இனி..கரண்ட் பில் இப்படியே கட்டலாம்; ஆனால் ஒரு கண்டிஷன் - மின்சார வாரியம்!
புதிய திட்டம் ஒன்றை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
மின்சார வாரியம்
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில், மின்சார வாரியத்திற்கு 13,811 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இருப்பினும், தடையற்ற மின்சாரத்தை விநியோகம் செய்ய தீவிரம் காட்டி வருகிறது. முன்னதாக, மின் கட்டணம் கட்ட மின்சார அலுவலகம் சென்று மணி கணக்கில் வரிசையில் காத்திருந்து கட்ட வேண்டும்.
அதன்பின், டிஜிட்டல் மையமாகிவிட்ட நிலையில் மின்கட்டணத்தை பலர் மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திலும், செயலியிலும் கட்டி வருகின்றனர்.
வாட்ஸ் அப் வசதி
இந்நிலையில், 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர் வாட்ஸ் அப் செயலி மூலம் யூபிஐ வாயிலாக மின் கட்டணம் செலுத்தலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால், தவறான எண்ணிற்கு கட்டணத்தை செலுத்தி ஏமாறாமல் இருக்க, Tangedco-வின் லோகோ,
அதிகாரப்பூர்வ எண் ஆகியவற்றை சரிபார்த்து கொள்வது முக்கியம். இதற்கிடையில், 00 யூனிட்களுக்கு குறைவாக மின்சாரம் செலுத்துவோர் தான் அதிக அளவில் இருக்கின்றனர். எனவே, வாட்ஸ்-அப் வாயிலாக மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையை அனைத்து நுகர்வோர்களுக்கும் அறிமுகம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
#JUSTIN மகிழ்ச்சியான செய்தி?
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) May 17, 2024
வாட்ஸ்ஆப்-ல் மின்கட்டணம் செலுத்தலாம்!
தமிழ்நாடு மின்சார வாரியம்⚡மின் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி உள்ளது.
பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ் ஆப் செய்தி வசதி அறிமுகம்.
பாதுகாப்பு… pic.twitter.com/Ek4jlRIWU8