#INDvsAUS - EB கட்டலயா..? கரண்ட் இல்லாமல் ராய்ப்பூர் ஸ்டேடியத்தில் போட்டியா..?
இன்று நடைபெறும் 4-வது டி20 போட்டி ராய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா டி20
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா அணி டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகள் முடிந்துள்ள இதில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இன்று 4-வது போட்டி, சட்டிஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் இந்த போட்டிக்காக மும்முரமாக தயாராகி வரும் நிலையில், ஸ்டேடியம் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
EB பில் கட்டவில்லை
போட்டியின் சில மணி நேரங்களே உள்ள நிலையில், மைதானத்தின் சில பகுதிகளில் மின்சாரம் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. 2009-ஆம் ஆண்டு முதல் மின்கட்டணம் செலுத்தப்படவில்லையாம். 3.16 கோடி ரூபாய் கட்டணம் நிலுவையில் உள்ளதால், 5 ஆண்டுகளுக்கு முன் மைதானத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் ஒரு தற்காலிக இணைப்பு மைதானத்தில் நிறுவப்பட்டடுள்ளது.
ஆனால் அது பார்வையாளர்களின் கேலரி மற்றும் பெட்டிகளை உள்ளடக்கியதாகும். இன்றைய போட்டியின் போது மின்விளக்குகளை ஜெனரேட்டரைப் பயன்படுத்தி இயக்கப்படவுள்ளதாம்.