அரசின் இணையதளம் ஹேக் - வெளியான விஜய் பட காட்சிகள் - மர்ம நபர்கள் கைவரிசை
தமிழக பள்ளிக்கல்வி துறை இணையத்தில் மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
இணையதளம் ஹேக்
தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட இதில், விஜய்யின் மாஸ்டர் பட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் சேர்த்து சில, 10 வீடியோக்களும் பதிவேற்றப்பட்டுள்னன.
அரசின் பள்ளிக்கல்வி இணையத்தில், சினிமா காட்சிகள் பதிவேற்றப்பட்டதன் காரணத்தால், பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக மத்திய சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இதே போன்று பிரபல யூடியூப் குக்கிங் சேனல் ஒன்று முடக்கப்பட்டு. அதில் ஆபாச புகைப்படங்கள் பகிரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.