சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்க வேண்டும்..பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

M K Stalin Tamil nadu Narendra Modi
By Swetha Jun 27, 2024 05:07 AM GMT
Report

சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாகத் தொடங்க வேண்டி முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்டாலின் கடிதம் 

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை குறித்து  எழுதிய கடிதத்தில்,சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புடன் பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒருங்கிணைத்து மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியிருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்க வேண்டும்..பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! | Tn Cm Stalin Writes Letter To Pm Modi

  இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் பதிவு-69 இல் "மக்கள் தொகை கணக்கெடுப்பு" ஒன்றிய அரசின் பட்டியலில் உள்ளதையும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம், 1948-இல் உள்ள விதிகளின்படி நடத்தப்படுவதையும்,

தற்போது, பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் சாதிவாரியான மற்றும் பழங்குடி வாரியான தரவுகள் மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம், 1948-இன் கீழ் கணக்கிடப்படுகிறது.  நமது நாடு வளரும் நாடு என்ற முறையில், வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும்,

குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்களைச் சென்றடைய வேண்டும் என்று தாம் கருதுவதாகவும், பின்தங்கிய மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கொள்கைகளை வகுப்பதற்கும், மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் எப்போதும் அடிப்படையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்களுக்கும் வரும் தனி பேருந்து - சட்டமன்றத்தில் முதல்வரிடம் கோரிக்கை வைத்த எம்.எல்.ஏ!

ஆண்களுக்கும் வரும் தனி பேருந்து - சட்டமன்றத்தில் முதல்வரிடம் கோரிக்கை வைத்த எம்.எல்.ஏ!

கணக்கெடுப்பு 

மேலும், இந்தியா போன்ற ஒரு நாட்டில், சமூகச் சூழல் என்பது பல்வேறு சமூகங்களின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பதைக் குறிப்பிட்டுள்ளார். சமூக முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை வரலாற்று ரீதியாக நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக சாதி இருந்து வருவதால்,

சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்க வேண்டும்..பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! | Tn Cm Stalin Writes Letter To Pm Modi

சாதி அடிப்படையிலான சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு தரவுகள் பொதுக்களத்தில் கிடைக்கச் செய்வது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையிலிருந்து பெறப்பட்ட சரிபார்க்கக்கூடிய சமூகப் பொருளாதார குறியீடுகளின்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வகைப்படுத்துவதற்கான உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளில், மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் உள்ள பல்வேறு சாதிகள்,

சமூகங்கள் மற்றும் பழங்குடியினரின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி நிலை தொடர்பான அளவிடக்கூடிய தரவுகளின் தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.