ஆண்களுக்கும் வரும் தனி பேருந்து - சட்டமன்றத்தில் முதல்வரிடம் கோரிக்கை வைத்த எம்.எல்.ஏ!

M K Stalin Tamil nadu Government of Tamil Nadu
By Karthick Jun 25, 2024 02:18 PM GMT
Report

ஆண்களுக்கென தனி பேருந்து விட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் கோரிக்கை வைத்துள்ளார்.

பெண்கள் இலவச பேருந்து

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைய பெற்றதும், அக்கட்சி நிறைவேற்றியதில் மிக முக்கிய திட்டமாக பார்க்கப்படுகிறது பெண்கள் இலவச பேருந்து திட்டம். சென்னையின் அநேக இடங்களில் நாம் இந்த பிங்க் பஸ்களை பார்க்கலாம்.

Pink bus tamil nadu

பெண்களிடம் பெறும் வரவேற்பை பெற்ற திட்டமாக இந்த இலவச பேருந்து திட்டம் அமைந்துள்ளது. அதே நேரத்தில், ஆண்கள் புறக்கணிக்கப்படுவதாக பலரும் கருத்துக்களை தெரிவித்தார்கள்.

அடிச்சது ஜாக்பாட்...கோவையில் வேகமெடுக்கும் பணிகள் - சர்வதேச கிரிக்கெட் எங்கு அமைகிறது தெரியுமா?

அடிச்சது ஜாக்பாட்...கோவையில் வேகமெடுக்கும் பணிகள் - சர்வதேச கிரிக்கெட் எங்கு அமைகிறது தெரியுமா?

இது காழ்புணர்ச்சியின் வெளிப்பாடு என சிலர்ஜாலியாக எடுத்துக்கொண்டார்கள்.

ஆண்களுக்கு பேருந்து

ஆனால், ஆண்களுக்கும் முக்கியத்துவம் ஒரு அரசு தரவேண்டும்.ஒரு ஆணாக என்னோட எதிர்பார்ப்பும் இதுவே. இப்படி இருக்கும் சூழலில் தான், ஆண்களுக்கான தனி பேருந்து கோரிக்கை சட்டமன்றத்தில் ஒளிந்துள்ளது.

MK Stalin Bus

காங்கிரஸ் கட்சியின் திருவாடானை சட்டமன்ற உறுப்பினரான கருமாணிக்கம் இந்த கோரிக்கையை வைத்துள்ளார். பெண்களுக்கான விடியல் பயணத்திட்டம் ஆண்களுக்கும் விருப்படுத்தி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.