அடிச்சது ஜாக்பாட்...கோவையில் வேகமெடுக்கும் பணிகள் - சர்வதேச கிரிக்கெட் எங்கு அமைகிறது தெரியுமா?
தமிழகத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்த தற்போது வரை ஒரே ஒரு கிரவுண்ட் மட்டுமே உள்ளது.
மைதானம்
சென்னை சேப்பாக்கம் வரலாறு சிறப்பு மிக்க மைதானமாக திகழ்கிறது. நீண்ட காலமாக கிரிக்கெட் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் ஹோம் கிரவுண்டாகவும் சென்னை சேப்பாக்க மைதானம் விளங்குகிறது.
ஆனால், அதே நேரத்தில் பல மாநிலங்களில் இரண்டு மைதானங்கள் அமைந்திருக்கின்றன. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அண்டைமாநிலமான ஆந்திர பிரதேசம். மாநிலம்இரண்டாக பிரிவதற்கு முன்பே 2 மைதானங்கள் மாநிலத்திற்கு வந்துவிட்டன.
பணிகள் மும்முரம்
இந்த நிலையில் தான், தமிழகத்திலும் நீண்ட காலமாக இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவேண்டும் என பல காலகோரிக்கை சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
கோவை சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் சிறைச்சாலை மைதானம் சுமார் 21 ஏக்கர் பரப்பளவு கொண்ட புறம்போக்கு இடமாக உள்ளது. இதனை விளையாட்டு துறைக்கு மாற்றி, அங்கு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கொண்டு வர பணிகள் மும்முரப்படுத்தப்பட்டுள்ளன.
அரசு புறம்போக்கு நிலமான திறந்தவெளி சிறை மைதானத்தின் 20.72 ஏக்கர் இடத்தை விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு மாற்றி தீர்மானம் நிறைவேற்றுமாறு, கோவை கிழக்கு மண்டல உதவி ஆணையருக்கு கோவை தெற்கு தாசில்தார் கடிதம் எழுதியிருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.