அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் - 17 நாட்களின் பயணத் திட்டம் இதுதான்!
அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 12ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
முதலமைச்சர்
தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா செல்ல உள்ளார். இந்த நிலையில்,இன்றிரவு 10 மணிக்கு சென்னையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுகிறார்.
நாளை (ஆக.28) சான்பிரான்சிஸ்கோ செல்லும் முதலமைச்சர், அங்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.இதனைத் தொடர்ந்து ஆக.31 ஆம் தேதி புலம்பெயர் தமிழர்களுடன் சந்திப்பு நடைபெற உள்ளது .
தொடர்ந்து செப்டம்பர் 2 ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ புறப்படுகிறார்.மேலும் செப்டம்பர் 7 ஆம் தேதி சிகாகோவில் அயலகத் தமிழர்களைச் சந்திக்கிறார்.
அமெரிக்க பயணம்
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 12ஆம் தேதி வரை சிகாகோவில் தங்கும் முதலமைச்சர், 'ஃபார்ச்சூன் 500' பட்டியலில் உள்ள நிறுவன அதிகாரிகள், கூகுள் CEO சுந்தர் பிச்சை ஆகியோரைச் சந்தித்து உரையாடுகிறார். செப்டம்பர் 12ஆம் தேதி அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் தமிழகம் திரும்புகிறார்.
முன்னதாக 2023 மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1342 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை தரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.