பரபரக்கும் இந்தியா ஆலோசனை கூட்டம்; மு.க.ஸ்டாலின் பயணம் ரத்து - திடீர் முடிவுக்கு என்ன காரணம்?
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்தியா கூட்டணி
தமிழ்நாட்டிற்கு முதலாம் கட்டத்திலேயே ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. ஏழு கட்டங்களைக் கொண்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையிலும், ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.
இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.
ஆலோசனைக் கூட்டம்
இதில், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களும், அகிலேஷ் யாதவ், சரத் பவார், உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால், பிரகாஷ் கரத், டி.ராஜா மற்றும் தேஜஸ்வி யாதவ், உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர். இதற்கிடையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் டெல்லி செல்லவில்லை.
அவருக்குப் பதிலாக திமுக பொருளாளர் டி.ஆர். பாலு பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அந்த நேரத்தில் கடைசிக்கட்டத் தேர்தல் நடைபெறுவதால் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. தொடர்ந்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தொடர்பான ஊடக விவாதங்களில் காங்கிரஸ் கட்சி சார்பாக எவரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்படுள்ளது.