சான் பிரான்சிஸ்கோ டூ சிகாகோ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!
சிகாகோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு என்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி,
சிகாகோ
இன்பிங்ஸ் ஹெல்த் கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் ,அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ மாகாணத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றடைந்தார். அங்கு அவருக்குபுலம்பெயர் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நடனம், சிலம்பம் என பாரம்பரிய முறைப்படி முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிகாகோவில் முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார்.
இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம் IBC Tamil
தடுப்புக் காவலில் உள்ள ஈஸ்டர் வழக்குடன் தொடர்புடையவர்கள்! 7-ஆவது குற்றவாளி நீதிமன்றில் பகிரங்கம் IBC Tamil