சான் பிரான்சிஸ்கோவில் ரூ1000 கோடி முதலீடுகளை ஈர்த்த முதலமைச்சர்!
சான் பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
சென்னை சிறுசேரியில் ₹450 கோடி முதலீட்டில் நோக்கியா ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 10ஜி, 25ஜி, 50ஜி, 100ஜி உள்ளிட்ட சேவை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், இதன் மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வேலைவாய்ப்புகள்
சென்னையில் பே பால் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மையம் அமைக்கவும் ஒப்பந்தம்; இந்நிறுவனம் மூலம் 1000 பேருக்கு வேலை கிடைக்கும். சென்னை செம்மஞ்சேரியில், செமிகண்டக்டர் ஆராய்ச்சி மையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மைக்ரோ சிப் நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
₹250 கோடி முதலீட்டில் அமைய உள்ள மைக்ரோ சிப் நிறுவனம் மூலம் 1,500 பேருக்கு வேலை கிடைக்கும் சென்னை தரமணியில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த செமிகண்டக்டர் உற்பத்தி மையம் அமைக்க அப்ளைட் மெடீரியல்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.