முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்- மக்களவை குழு தலைவர் யார்?
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் புதிய எம்பிக்கள் கூட்டம் இன்று நடக்க இருக்கிறது.
எம்.பி.க்கள் கூட்டம்
இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது.
அதிலும், பா.ஜ.க தனிப்பெரும்பான்மைக்கான இடங்களை தொடாமல் 240 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்தியா கூட்டணி 230 இடங்களை கைபற்றியது.பல்வேறு குழப்பங்களுக்கு அடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மூன்றாம் முறையாக நரேந்திர மோடி பிரதமராக உள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொருத்தவரை தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களையும் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
குழு தலைவர் யார்?
இதில், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர், துணை தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் திமுகவினர் 21 பேரும், கொமதேகவில் ஒருவரும் போட்டியிட்டனர். இந்த 22 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் கடந்த முறை எம்பியாக இருந்த 10 பேர் மற்றும் புதுமுகங்கள் 11 பேர் என,
வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் 21 பேரும் நேற்று முன்தினம் ஸ்டாலினை சந்தித்து வெற்றி சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.இதற்கிடையில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவர், துணை தலைவர்,
பொருளாளர், கொறடா ஆகிய பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. முன்னதாக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, துணைத் தலைவராக கனிமொழி, கொறடாவாக ஆ.ராசா ஆகியோர் இருந்துள்ளனர். எனவே மீண்டும் அவர்களே இந்த பதவிகளுக்கு நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.