மக்களவை தேர்தல்: திடீரென கொடைக்கானல் புறப்படும் மு.க.ஸ்டாலின் - என்ன காரணம்?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானலுக்கு வருகை தரவுள்ளார்.
கொடைக்கானல்
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் தற்போது அரசியல் கட்சியினர் ஓய்வெடுக்க தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் வெப்ப அலை வீசி வரும் நிலையில், கொடைக்கானலில் இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது.
மு.க.ஸ்டாலின்
இதனால் அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருகின்றனர். இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 29-ம் தேதி ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானலுக்கு வருகை தரவுள்ளார்.
அவர் வரும் மே 4-ம் தேதி வரை இங்குள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு, மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் 1 வாரம் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.