யார் கேடி? தயாநிதி மாறனை கைது பண்ணுங்க..கொதித்தெழுந்த தமிழக பாஜக!
பிரதமர் நரேந்திர மோடியை தவறாக பேசிய திமுக எம்பி தயாநிதி மாறனை கைது செய்ய வேண்டும் என என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
யார் கேடி?
‘கேடி' என்று மோடியை சொல்கிறார் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் யார் கேடி? சட்ட விரோதமாக 764 தொலைபேசி இணைப்புகளை தனது வீட்டில் இணைத்துகொண்டு சட்ட விரோத தொலைபேசி இணைப்பகத்தை நடத்தி பல கோடி ரூபாய் அரசாங்கத்தின் பணத்தை கொள்ளையடித்த கொள்ளைக்கார கூட்டம் பிரதமரை கேடி என்று சொல்வது அயோக்கியத்தனம்.
முதல்வர் ஸ்டாலின் இது போன்று பேசியிருந்தால் தமிழக காவல் துறை அடுத்த நொடியே கைது செய்து சிறையிலடைத்திருக்கும். பிரதமர் குறித்து இந்த வார்த்தையை பிரயோகம் செய்தது குற்றச் செயல் மட்டுமல்ல,அரசுக்கு எதிரான, தேசத்துக்கு எதிரான குற்றம்.
கைது
மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களை தமிழக காவல்துறை அல்லது சென்னை மாநகர காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் உடனடியாக இந்த நபரை கைது செய்ய உத்தரவிட வேண்டும்.
பிரதமரை தவறாக பேசிய தயாநிதி மாறனை தமிழக முதலமைச்சர் அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பதோடு,அவரை கைது செய்து சிறையிலடைக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தயாநிதி மாறன் மீது உரிய நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.