அலப்பற கிளப்புறோம்...அண்ணாமலை நிரந்தரம்..அதிமுகவை திருப்பியடிக்கும் பாஜகவினர்

Tamil nadu ADMK BJP K. Annamalai Edappadi K. Palaniswami
By Karthick Sep 25, 2023 04:07 AM GMT
Report

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றவேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை வைத்துள்ளதாக பரவலாக கூறப்பட்டு வரும் சூழலில், பாஜகவினரின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகின்றது.

அண்ணாவை விமர்சித்த அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திராவிட கட்சிகளின் தலைவரான  அண்ணாதுரையை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்ததில் இருந்து அதிமுக பாஜக கூட்டணியில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக கூட்டணியில் தொடரவேண்டும் என்றால் அண்ணாமலையை மாநில பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என அதிமுகவினர் தேசிய பாஜக தலைவர்களிடம் வலியுறுத்ததாக கூறப்படுகிறது.

tn-bjp-reply-to-admk-via-posters

அண்ணாதுரையை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்ததில் இருந்து அதிமுக பாஜக கூட்டணியில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக கூட்டணியில் தொடரவேண்டும் என்றால் அண்ணாமலையை மாநில பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என அதிமுகவினர் தேசிய பாஜக தலைவர்களிடம் வலியுறுத்ததாக கூறப்படுகிறது.

எதிர்க்க நான் தயார்...அதிமுகவிடம் இருந்து விலக தயாராகிறாரா அண்ணாமலை

எதிர்க்க நான் தயார்...அதிமுகவிடம் இருந்து விலக தயாராகிறாரா அண்ணாமலை

வைரலாகும் போஸ்டர் 

அவர் மக்களிடம் உறையற்றிய போது, சிலரை எதிர்க்க தான் தயராகிவிட்டதாக குறிப்பிட்டு, அதே முடிவை தான் பாஜக கட்சியும் எடுக்கும் என தான் நம்புவதாக பேசியிருந்தார். இவரின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதே சூட்டுடன் தற்போது பாஜகவினர் போஸ்டர் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

tn-bjp-reply-to-admk-via-posters

அதிமுகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு சார்பாக அமைந்துள்ள அந்த போஸ்டரில், கிளம்பு.! கிளம்பு !! அந்து போச்சு கிளம்பு ! கிளம்பு !! என்றும் அலப்பற கிப்புறோம்! தலைவரு நிரந்தரம் என அண்ணாமலையின் புகைப்படத்துடன் அச்சடிக்கப்பட்டுள்ளது.