எதிர்க்க நான் தயார்...அதிமுகவிடம் இருந்து விலக தயாராகிறாரா அண்ணாமலை

Amit Shah ADMK BJP Narendra Modi K. Annamalai
By Karthick Sep 24, 2023 03:30 PM GMT
Report

அதிகரித்து வரும் வார்த்தை மோதல்களின் காரணமாக, அதிமுகவிடம் இருந்து கூட்டணியை முற்றிலுமாக முறித்துக்கொள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகின்றது.

அண்ணாமலையின் முடிவு

அதன் வெளிப்பாடே அவர் பொள்ளாச்சி என் மண் என் மக்கள் பாதயாத்திரையில், "அரசியல் மாற்றத்தை பார்க்கவேண்டும் என்பதால், சிலரை எதிர்த்து நிற்கும் காலம் இது என குறிப்பிட்டு, ஏனென்றால் தான் மாநில தலைவர் என்ற நம்பிகையை மக்களிடம் இழந்துவிட தயாராக இல்லை என தெரிவித்தார்.

annamalai-strond-decision-in-breaking-allaince

தான் சிலரை எதிர்க்க நிக்க தயாராகிவிட்டதாக கூறிய அண்ணாமலை, அதே போன்ற நிலைப்பாட்டையே பாஜகவும் எடுக்கும் என எதிர்பார்பதாக கூறினார். இதன் மூலம் அதிமுகவை தான் மறைமுகமாக அண்ணாமலை கூறுகிறார் என்ற கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றது.

யாருக்கு லாபம்   

தமிழகத்தில் பாஜக ஆழமாக காலுன்றாத நிலையில், தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை அக்கட்சி பெறுவது பெரிய சவாலான விஷயமே. ஆனால், கட்சியை வளர்க்கும் முயற்சியில் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் அண்ணாமலையின் செயல்பாடுகள் குறிப்பிட்ட மக்களை கவர்ந்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

annamalai-strond-decision-in-breaking-allaince

அதே நேரத்தில் தமிழகத்தில் வேரூன்றி இருக்கும் திராவிட கட்சிகளின் துணை எந்த ஒரு கட்சிக்கும் தேவை தான். மற்றொரு போக்கில் பார்த்தால், அதிமுகவிற்கு தற்போது ஒரு தேசிய கட்சியின் துணை தேவைப்படுகிறது. அது பாஜகவாகவே இருந்து வருகின்றது. இந்த கடினமான சூழலில் தனித்து போவது, இருகட்சிக்கும் ஒரு வகையில் லாபம் என்றால் மற்றொரு வகையில் நஷ்டம் என்றும் கூறலாம்.