ரவுடிக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்த விவகாரம் - குண்டர் சட்டத்தில் தமிழக பாஜக மாநில நிர்வாகி கைது!
தமிழக பாஜகவின் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
ரவுடி சீர்காழி சத்யா என்பவரை மாமல்லபுரம் அருகே காலில் சுட்டு தமிழக போலீசார் கைது செய்தனர். கைதான அவரிடம் இருந்து கைத்துப்பாக்கியும், துப்பாக்கி தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதானவரிடம் துப்பாக்கி குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில்,அதனை தமிழக பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் வாங்கி கொடுத்ததாக கூறியுள்ளார்.
குண்டர் சட்டம்
அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் அலெக்சிஸ் சுதாகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட எஸ்.பி அளித்த பரிந்துரையில் பேரில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் பிறப்பித்த உத்தரவின் பேரில் அலெக்சிஸ் சுதாகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தற்போது சிறையில் இருக்கும் அலெக்சிஸ் சுதாகர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.