தொடர்ந்து வரும் வழக்குகள் - பாய்ந்தது குண்டர் சட்டம்
பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சவுக்கு சங்கர்
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டி ஒன்றில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசினார் என அவர் மீது புகார்கள் எழுந்தன.
கோவை சைபர் கிரைம் போலீசார் இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நிலையில், தேனியில் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு வருகிற 17-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் உத்தரவிடப்பட்டுள்ளது.
குண்டர் சட்டம்
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்ட நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
கைதானத்தை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது சென்னை, கோவை, திருச்சி, தேனி என பல இடங்களில் தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.