பூரண மது விலக்கு சாத்தியமில்லை..இப்படி தான் செய்யணும்! அண்ணாமலை அட்வைஸ்
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டின் பல இடங்களிலும் தலைவர்கள் யோகா செய்தார்கள். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை ஈஷா யோகா மையத்தில் யோகா செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியது வருமாறு,
சோகமான நிகழ்வு. விதிக்கு 4 பேர் இறந்திருக்கிறார்கள். சம்மந்தம் யார் சொல்வார்கள். நடந்திருக்க கூடாது ஒன்று. மனதளவில் பெரியதாக பாதித்துள்ளது. பார்க்க கூடாது விஷயம் இதெல்லாம். சமுதாயத்தின் கடை கோடியில் இருக்கும் நபர் இறந்துள்ளார்.
அதற்கு நாம் தீர்வு கண்டுபிடிக்கவேண்டும். சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இல்லை காசு. அவர்களின் குடுமபத்திற்கு தான். சாராயம் அருந்தியவர்கள் மீது எனக்கு கோபம் உள்ளது. இது ஊக்கமாக பார்த்தாலும், சில குடும்பத்தினர் சிக்கலில் உள்ளார்கள்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்...பலியானோருக்கு தலா ரூ.1 லட்சம் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!!
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே இறந்துள்ளார்கள். நேற்று செய்யவேண்டிய கட்டாயம், அவர்களுக்கு அடுத்த நாளுக்கு காசு இல்லை, அதனால் தான்.
சாத்தியமில்லை..
பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத ஒன்று. கள்ளுக்கடைகளை திறந்தால் தான் இதனை குறைக்கமுடியும். கள்ளு மது அல்ல. இது கள்ளுக்கடைகளை கொண்டு வரும் நேரமிது. இது ஜனநாயக நாடு. கள்ளுக்கடைகளை திறங்கள். பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக தான் டாஸ்மார்க் கடைகளை திறக்கவேண்டும். அதே நேரத்தில் கெட்டுபோன கள்ளுக்கடைகளும் பாதிப்பு தான். அதன் காரணமாக தான் அரசு எடுத்து நடத்தவேண்டும். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது எங்கு போய் முடியும்.
மக்கள், அரசு, காவல்துறை, ஒழிப்பு துறை எல்லாமே சார்ந்து தான் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இந்தியா ஒரு அபாயகரமான கட்டத்தில் உள்ளார்கள். narcotics control என்பது மிக பெரிய வேலைகள்.