ஆளுநர் உரையுடன் கூடும் சட்டப்பேரவை கூட்டம்; புதிய அறிவிப்புகள் - நேரடி ஒளிப்பரப்பு!
சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
சட்டப்பேரவை
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. அதில் ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றவுள்ளார்.
அவரது உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவா் அப்பாவு தமிழில் வாசிக்க உள்ளாா்.கவர்னர் உரை நிகழ்ச்சியை டிடி தமிழ் நியூஸ் மூலம் நேரடியாக பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கை
தொடா்ந்து, பேரவையின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆளுநா் உரை மற்றும் அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாத நிகழ்வுகள் 4 நாள்களுக்கு நடைபெறும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், வரும் 19-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
மேலும், ஆளும் கட்சி சாா்பில், மக்கள் நலன் சாா்ந்த பல முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வசதிக்காக அகண்ட திரை, புதிய இருக்கைகள் என கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.