3 வருஷமா என்ன செய்தார்? ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் காட்டமான கேள்வி!

Tamil nadu R. N. Ravi Supreme Court of India
By Sumathi Nov 21, 2023 04:17 AM GMT
Report

ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆளுநர் ரவி

தமிழக சட்டப்பேரவையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. ஆனால், 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

supremecourt about governor ravi

இந்நிலையில், சட்ட மசோதாக்களுக்கு அனுமதியளிப்பதற்கு ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

உச்சநீதிமன்றம் வைத்த குட்டு; மிரண்டு போன ஆளுநர் ரவி - விளாசிய நாராயணசாமி

உச்சநீதிமன்றம் வைத்த குட்டு; மிரண்டு போன ஆளுநர் ரவி - விளாசிய நாராயணசாமி

உச்ச நீதிமன்றம் காட்டம்

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாவை கிடப்பில் போடுவது கவலைக்குரியது. எதுவும் செய்யாமல் கோப்புகளைக் கிடப்பில் போட முடியாது. ஆளுநர் ரவி தரப்பில் நவம்பர் 13-ஆம் தேதி அவர் மசோதாக்களை மாநில அரசுக்கு திருப்பியனுப்பிவிட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.

governor-ravi-for-delay-in-clearing-bills

நாங்கள் இவ்வழக்கில் எங்கள் கருத்தை முன்வைத்தது நவம்பர் 10-ல். அதன் பின்னர் மூன்றே நாட்களில் ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால், இந்த மசோதாக்கள் 2020-ல் இருந்தே கிடப்பில் உள்ளன. அப்படியென்றால் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பின்னர் ஆளுநர் முடிவெடுத்திருக்கிறார்.

மூன்றாண்டுகளாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடும் வரை ஏன் ஆளுநர்கள் காத்திருக்க வேண்டும்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து, ஆளுநரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு காத்திருப்பதாகக் கூறி வழக்கை டிசம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.