உச்சநீதிமன்றம் வைத்த குட்டு; மிரண்டு போன ஆளுநர் ரவி - விளாசிய நாராயணசாமி
ஆளுநர் ஆர்.என். ரவி மிரண்டு போயிருக்கிறார் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழ்நாடு அரசு எடுத்துரைத்த வாதங்களைக் கவனித்துக் கேட்ட உச்சநீதிமன்றம், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்த கருத்துகள்,
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி என முதல்வர் ஸ்டாலின் சட்டசபை உரையின் போது தெரிவித்திருந்தார், இந்நிலையில், புதுச்சேரி தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி,
நாராயணசாமி கருத்து
“உச்ச நீதிமன்ற உத்தரவைப் பார்த்து ஆர்.என்.ரவி பயந்து விட்டார்” - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உச்சநீதிமன்றம் வைத்த குட்டால் ஆளுநர் ஆர்.என். ரவி மிரண்டு போயிருக்கிறார். தமிழக அரசு அனுப்பிய கோப்புகளுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறிய உடனே,
10 கோப்புகளை ஆளுநர் ரவி உச்ச நீதிமன்ற உத்தரவைப் பார்த்து பயந்து சுய கவுரவத்தை பாதுகாத்துக்கொள்ள அதனை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார். தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதை தவிர ஆளுநருக்கு வேறு வழியே இல்லை.
அரசியல் சட்டத்திற்கு மாறாக, ஆளுநர் ரவி மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார் எனத் தெரிவித்துள்ளார். ஆளுநர் ரவி திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பதால் அங்கு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது பற்றி முக்கிய ஆலோசனை நடத்துவார் எனக் கருதப்படுகிறது.