நிதி ஆயோக்; பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை- சபாநாயகர் அப்பாவு தாக்கு!
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் இடம் தான் நிதி ஆயுக் என அப்பாவு தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அப்பாவு
சென்னை திருவேற்காட்டில் பெருந்தலைவர் காமராஜர் 122 ஆவது பிறந்த நாளையொட்டி நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவு , முன்னாள் அமைச்சர் நா.மு.நாசர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் விக்ரமராஜா ஆகியோர் கலந்து கொண்டு,
1112 பேருக்கு கல்வி ஊக்கத்தொகை, தையல் மெஷின் மற்றும் 500 பேருக்கு 5 கிலோ அரிசி, புடவை, நோட்டுப் புத்தககங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபநாயகர் அப்பாவு, “பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் இடம் தான் நிதி ஆயுக்.
மோடி ஆட்சிக்கு முன்பு ப்ளான் கமிட்டியாக இருந்தது, அவர் வந்த பின்பு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய கையெழுத்தாகும் இடமாக மாறியுள்ளது. அதானி, அம்பானிக்கு பொதுத்துறை விற்பனை செய்யும் இடமாக நிதி ஆயுக் உள்ளது.
பொதுத்துறை நிறுவனம்
தமிழ்நாட்டில் உழைக்கிற சமுதாயத்தை குறி வைத்து எவ்வளவு பாதிப்புகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி துறைமுகத்தில் பருப்பு இறக்குமதி செய்யப்பட்ட போது தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டத்திலும் உள்ள மாவு மில்களுக்கு 10,000க்கும் மேற்பட்ட லாரிகளில் பருப்பு கொண்டு செல்லப்படும.
இதன் மூலம் மாவு மில், லாரி என உழைக்கிற சமுதாயம் பயன்பெற்று வந்தன. அதேபோல் சிவகாசி, தூத்துக்குடி, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட மாவட்டங்களில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூலம் 5 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர்.
ஆனால் குஜராத் முதலாளிகள் சைனாவில் இருந்து லைட்டர்களை இறக்குமதி செய்து அதனை ரூ, ரூ3க்கு விற்பனை செய்தார்கள். இது முதல்வர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு லைட்டர் மீது ரூ.43 வரி விதிக்கப்பட்டது. அதேபோல் இந்தியா மட்டுமல்ல உலகத்திற்கே இங்கு இருந்து தான் பட்டாசு செல்கிறது.
நிதி ஆயோக்
அதனையும் நசுக்கும் முயற்சியில் சைனா பட்டாசுகள் இறக்குமதி செய்து வருகின்றனர். அம்பானி, அதானி தயாரிக்கும் எண்ணைக்காக தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் எண்ணெய் நிறுவனங்களை நசுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் நிறுவனங்களை வருமான வரித்துறை,
அமலக்கத்துறையை வைத்து சோதனை என்ற பெயரிலேயே ஒன்றிய அரசு அச்சுறுத்தி வருகிறது என்றார். மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நட்டப்பட்டது; ஆனால் அந்த திட்டத்திற்கு இந்த ஆண்டும் நிதி ஒதுக்கப்படவில்லை. செய்யூர் மின் திட்டத்திற்காக 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதால் அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு அள்ளி கொடுக்கும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. இதைப்பற்றி எல்லாம் வியாபாரிகளுக்கும், வணிகர்களுக்கும் தெரியுமா. இதனை கண்டித்து நீங்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.