தனிப்பட்ட விரோத கொலை குற்றங்களை அரசுக்கு எதிராக திருப்புகின்றனர் - சபாநாயகர் அப்பாவு!
தனிப்பட்ட விரோத கொலை குற்றங்களை அரசுக்கு எதிராக திருப்புகிறார்கள் என அப்பாவு கூறினார்.
தனிப்பட்ட விரோதங்கள்
முன்னதாக நாகர்கோவிலில் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறுகிறார்கள்.
தமிழக அரசின் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் சொல்ல முடியாததால் ஆங்காங்கே சில தனிப்பட்டவிரோதங்களால் ஏற்படுகின்ற கொலை குற்றங்களை அரசுக்கு எதிராக திருப்பி விடுகிறார்கள்.
சபாநாயகர் அப்பாவு
தமிழகத்தில் தொடர் போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ அல்லது தொடர்ந்து பிரச்சினையோ இருப்பதாக தெரியவில்லை. மணிப்பூர் மாநிலத்தை போன்றா, இங்கு நடக்கிறது. நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலம் தமிழகம் தான்.
சட்டம் ஒழுங்கை சிறப்பாக வைத்திருப்பதால் தான் உலக அளவிலான செஸ் போட்டி இங்கு நடந்தது. இந்தியாவிலேயே அனைத்து மத வழிபாடுகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கின்ற மாநிலம் தமிழகம் ஆகும்" இவ்வாறு கூறியுள்ளார்.