குட்டீஸ்க்கு ஓர் குட் நியூஸ்... 1, 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி வீட்டுப்பாடம் இல்லை!

Tamil nadu Anbil Mahesh Poyyamozhi
By Sumathi Aug 16, 2022 04:29 AM GMT
Report

1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வீட்டுப்பாடம்

1 மற்றும் 2ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால் அந்த நடைமுறை செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்யாமல் இருந்தது.

குட்டீஸ்க்கு ஓர் குட் நியூஸ்... 1, 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி வீட்டுப்பாடம் இல்லை! | Tn 1St And 2Nd Class Student Dept School Education

தற்போது இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பிலும் 2ம் வகுப்பு வைர பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மேலும் வீட்டுப்பாடம் தரப்படுவதில்லை என்பதை பறக்கும்படையினர் ஆய்வு செய்து உறுதி செய்யவேண்டும் என முதனமை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

குட்டீஸ்க்கு ஓர் குட் நியூஸ்... 1, 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி வீட்டுப்பாடம் இல்லை! | Tn 1St And 2Nd Class Student Dept School Education

ஆய்வுக்கு பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.