சமரசமாகாத கூட்டணி பேச்சுவார்த்தை - அதிமுக பக்கம் வரும் த.மா.கா..!
அதிமுக கூட்டணியில் த.மா.கா..? அதிமுக -பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெற போகின்றன என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
கூட்டணி கணக்கு
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி எப்படி அமையும் என்பதில் தான் பெரிய சந்தேகம் நீடிக்கிறது.
பிரதான கட்சிகளான பாமக - தேமுதிக - த.மா.கா போன்ற கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக, பாஜக இரு தரப்பும் முயல்வதாக கூறப்படுகிறது. ஆனால், இன்னும் இறுதியான கூட்டணி கணக்கு முடிவாகவில்லை.
அதிமுகவில் த.மா.கா
இந்நிலையில், தான் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் இடம்பெறப்போகிறதா.? என்ற கருத்துக்கள் வலுப்பெற துவங்கிவிட்டன. காரணம் த.மா.கா கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா தெரிவித்துள்ள கருத்துக்கள் தான் காரணம்.
நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும் போது, த.மா.கா எந்த கூட்டணியிலும் தற்போது இல்லை என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், உரிய மரியாதையுடன் 2 இடங்களை தங்களுக்கும் ஒதுக்கி, சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி என்றும், தமிழகத்தில் பாஜக வளர்ந்து வரும் கட்சி என்று சுட்டிக்காட்டி, கடந்த தேர்தலில் அதிமுக ஒதுக்கிய இடத்தில் தான் பாஜக போட்டியிட்டதாகவும் அவர் கூறினார்.