பாஜகவா..? அதிமுகவா..? நாசுக்காக சொன்ன ஜி.கே.வாசன்
வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி கணக்குகள் தமிழ்நாட்டில் சூடுபிடிக்கத்துவங்கியுள்ளது.
அதிமுக பாஜக
திமுக கூட்டணி கிட்டத்தட்ட முடிவான நிலையில், அதிமுக - பாஜக கட்சிகளின் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் பற்றி தான் குழப்பங்கள் நீடிக்கிறது.
இன்னும் அதிகாரபூர்வமாக இருகட்சிகளும் தங்களது கூட்டணியை உறுதிப்படுத்திடாத நிலையில், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசன், டெல்லி சென்று பாஜக கட்சி தலைமையை சந்தித்தாகவும் கூறப்படுகிறது.
எந்த கூட்டணிக்கு அவர் செல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் தெரிவிப்பேன்." என்றார்.