திருவெற்றியூரில் 17 ஆண்டுகள் கழித்து நடக்கும் கருட சேவை - திடீரென சரிந்த பெருமாள் சிலை!!
வைகாசி பிரம்மோற்சவ கருட சேவையின் போது, பல்லக்கின் தண்டு உடைந்து பெருமாள் சிலை சரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் வரதராஜ பெருமாள்
சின்னகாஞ்சிபுரம் எனப்படும் திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் 400 ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் இருக்கும் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவரான பவழவண்ண பெருமாள் சிலையை இக்கோவிலுக்கு எடுத்து வந்ததன் பேரில் சின்ன காஞ்சிபுரம் எனப்படுகிறது.
சரிந்த பெருமாள்
தற்போது வைகாசி பிரம்மோற்சவம் விழா கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக இன்று கருட சேவை நிகழ்வு நடைபெற்றது.
கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வந்ததன் காரணமாக, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் கருட சேவை நடைபெற்றது.
உற்சவத்திற்காக பெருமாள் சாமி பல்லக்கில் கொண்டு வரப்பட்ட போது, திடீரென பக்தர்கள் எதிர்பாராத நிலையில் பல்லக்கின் தண்டு உடைந்து பெருமாள் சிலை சரிந்துள்ளது. அருகில் இருந்து பட்டாச்சாரியாருக்கும் சற்று காயம் ஏற்பட்டுள்ளது.