கழிப்பறையில் பாம்புகள்..செய்யாறு கல்லூரியில் அவலம் - வெளியான அதிர்ச்சி வீடியோ!
திருவண்ணாமலை அரசு கல்லூரியின் கழிவறையில் பாம்புகள் சாரை சாரையாக வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கல்லூரி கழிவறை
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரியில் சுமார் 8000 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் பெண்கள் கழிப்பறை நீண்ட நாட்களாக பயன் பாடின்றி உள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் கல்லூரி மாணவிகள் சிலர் கழிவறைக்குச் சென்றுள்ளனர். அப்போது, கழிவறையில் சாரை 30க்கும் மேற்பட்ட சாரை சாரையாகப் பாம்புகள் இருந்ததைப் பார்த்து அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்துள்ளனர்.
அதிர்ச்சி வீடியோ
இது பற்றி சக மாணவர்களிடம் தெரிவிக்கவே மாணவர்கள் சிலர் கழிவறைக்குச் சென்று, பாம்புகள் இருந்ததைத் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து, சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர் இந்த வீடியோ வைரலானத்தை அடுத்துத் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாம்புபுடி நபர்கள் கழிவறையில் இருந்த சில பாம்புகளைப் பிடித்துள்ளனர் .
மற்ற பாம்புகள் தப்பிய நிலையில் அதனைத் தேடி வருவதாகத் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சக மாணவிகள் கூறுகையில் :கழிப்பறை சுகாதாரமற்று, பராமரிப்பு இல்லாமலும் கிடப்பதால்,கழிப்பறைக்கு மிகுந்த அச்சத்துடனே சென்று வருவதாகவும், இதனால் சில மாணவிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றன.