திருவண்ணாமலை கோர விபத்து - உயிரிழந்தவர்களுக்கு ரூ 1 லட்சம் இழப்பீடு!
திருவண்ணாமலை விபத்தில் உயிரிழந்த 6 பேர் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
6 பேர் பலி
செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டாட்டா ஏஸ் வாகனம் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 6 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில், ஜானகிபுரம் என்ற இடத்தில் டாட்டா ஏஸ் வாகனம் வந்த போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியது.
அப்போது பின்னால் வந்த கனரக வாகனம், டாடா ஏஸ் மீது மோதியது. இதில் இரண்டு வாகனங்களுக்கும் இடையே சிக்கி டாடா ஏஸ் வாகனம் சுக்கு நூறானதில் அதில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இழப்பீடு அறிவிப்பு
அதனையடுத்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்த முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் திருவண்ணமாலை தீப திருவிழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர் என்பது தெரியவந்தது.
தற்போது உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.