சீமானை பார்க்கணும் - கத்தியை எடுத்து நெஞ்சில் கிழித்த இளைஞர் ; குடும்பத்துடன் தற்கொலை மிரட்டல்

Seeman Tiruppur
By Karthikraja Jul 02, 2024 05:47 AM GMT
Report

சீமானை பார்க்க வேண்டுமென என கூறி குடும்பத்துடன் தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்

திருப்பூர் குமரானந்தபுரம் நேதாஜி வீதியை சேர்ந்தவர் இளங்காமணி (வயது 47) பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். தனது மனைவி மற்றும் 14 வயது, 9 வயது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.

tiruppur

இந்த நிலையில், தனது மனைவி மற்றும் மகன்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிய இளங்காமணி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து பேச வேண்டும். இல்லையென்றால் கியாஸ் சிலிண்டரை திறந்து பற்ற வைத்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளங்காமணியிடம் லாவகமாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வடக்கு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அசம்பாவிதம் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர். 

உள்ளாட்சி தேர்தலில் தவெக.. சீமான் விஜய் கூட்டணி ? - புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு பதில்

உள்ளாட்சி தேர்தலில் தவெக.. சீமான் விஜய் கூட்டணி ? - புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு பதில்

 முதற்கட்ட விசாரணை

அதைத்தொடர்ந்து இளங்காமணியை கதவை திறக்க வைத்து, தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் உடனடியாக வீட்டுக்குள்நுழைந்து குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். இளங்காமணியை வீட்டிலிருந்து வெளியே அழைத்து வரும்போது, சீமானை பார்க்க வேண்டும் என்று கூறி, கத்தியை எடுத்து தன் நெஞ்சில் கிழித்துள்ளார். 

seeman

இதில் காயமடைந்த அவரை போலீசார் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீஸ் வாகனத்திலேயே அழைத்துச் சென்றனர். காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் இளங்காமணி கடந்த 2 நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

இதனால் தான் மனைவி மற்றும் மகன்களை வீட்டிற்குள் பூட்டி வைத்து இவ்வாறு செய்துள்ளார். ஒரு வழியாக அவர்கள் செல்போன் மூலமாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் போலீசார் விரைந்து சென்று அவர்களை மீட்டு அசம்பாவித சம்பவங்களை தவிர்த்தனர்.