பல் இல்லாத உனக்கு எதுக்கு அழகான மனைவி - நண்பனின் பல்லை அடித்து உடைத்த நபர்!
பல் இல்லாததை கேலி செய்த நண்பனை, நபர் ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளார்.
கேலி செய்த நண்பன்
திருப்பூர், அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (32). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பருடன் சென்று வார இறுதியில் மது அருந்துவது வழக்கம்.
காளிதாஸூக்கு 2 முன் பற்கள் கிடையாது எனக் கூறப்படுகிறது. இதனை அவர் நண்பரான பாண்டியன் அடிக்கடி ஏளனம் செய்து வந்துள்ளார்.
பல்லை உடைத்த நபர்
இந்நிலையில், சம்பவத்தன்று காளிதாஸின் செல்போனை வாங்கி அதில் உள்ள புகைப்படங்களை பார்த்த பாண்டியன் பல் இல்லாத உனக்கு எல்லாம் இவ்வளவு அழகான பொண்டாட்டியா எனக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ், அவரை மது பாட்டிலை கொண்டே சரமாரியாக தாக்கினார். பின் அங்கிருந்த உருட்டுக் கட்டையை எடுத்து வாயிலேயே அடித்துள்ளார்.
இதில் அவரது முன் பற்கள் உடைந்து நொறுங்கியுள்ளது. தொடர்ந்து விவரம் அறிந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.