எழுத்துப்பிழை...மாணவனின் தலைமுடியை இழுத்து சரமாரியாக தாக்கி கொன்ற ஆசிரியர்!
ஆசிரியர் சரமாரியாக தாக்கியதில், 15 வயது தலித் மாணவன் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆசிரியர் தாக்குதல்
உத்தரப்பிரதேசம், அவுரியா மாவட்டம் வைஷோலி பகுதியைச் சேர்ந்தவர் நிகித் குமார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். வகுப்பில் சமூக அறிவியல் பாட ஆசிரியர் அஷ்வினி சிங் தேர்வு ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த தேர்வில் நிகித்குமார் விடைத்தாளில் எழுத்து பிழை செய்துள்ளார். அதனால், கோபமடைந்த ஆசிரியர் மாணவரின் தலை முடியை பிடித்துக் கொண்டு குச்சியால் அடித்து உச்சியால் குத்தியும் சரமாரியாக தாக்கியிருக்கிறார்.
மாணவன் உயிரிழப்பு
இதில் அந்த மாணவர் மயக்கமடைந்து கீழே விழுந்திருக்கிறார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் மயக்கம் தெளியாததால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்கா எத்தாவா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் சிகிச்சை செலவு ரூ.40,000ஐ ஆசிரியரே ஏற்றுள்ளார். மேலும், மாணவனின் பெற்றோரையும் சாதிய ரீதியாக திட்டியுள்ளார். இந்நிலையில், மாணவனும் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.
போராட்டம்
இதனால், அங்குள்ள தலித் அமைப்புகள் நிகழ்வை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், அவுரியா மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் சாரு நிகம் ஆசிரியர் அஸ்வினி குமார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்துள்ளார்.
மேலும், ஆசிரியரை இடைநீக்கம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.