பைக்கை தொட்ட தலித் மாணவன் - சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கிய ஆசிரியர்!
ஆசிரியரின் பைக்கை தொட்டதற்காக தலித் சிறுவன் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலித் மாணவர்
உத்தரப்பிரதேச மாநிலம் ராணாபூரில் உள்ளது அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று. அங்கு ஆசிரியராக பணியாற்றுகிறார் கிருஷ்ண மோகன் சர்மா. இவருடைய வாகனத்தை 6ஆம் வகுப்பு பயிலும் தலித் மாணவர் ஒருவர் தொட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர் மாணவனைத் தாக்கியுள்ளார். அதுவும் ஒரு அறையில் பூட்டிவைத்து இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். அந்த மாணவனின் கழுத்தையும் கொலைவெறியுடன் நெறித்துள்ளார்.
தாக்கிய ஆசிரியர்
சக ஆசிரியர்கள் மாணவனை மீட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நக்ரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஆசிரியர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர், உறவினர் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், ராஜஸ்தானில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன், ஆசிரியைக்காக வைக்கப்பட்டிருந்த பானையில் இருந்து தண்ணீர் குடித்ததற்காக பள்ளி ஆசிரியர் அடித்ததால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
தலித் மாணவர்களுக்கு தொடர்ந்து நடைபெறும் அவலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.