பெயில் ஆன நானே கலெக்டர் ஆயிட்டேன், ஜாலியா இருக்கனும் - மாணவனுக்கு கலெக்டர் அட்வைஸ்!

Tamil nadu
By Vinothini May 27, 2023 06:37 AM GMT
Report

 10ஆம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்து விபரீத முடிவு எடுத்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியது வைரலாகி வருகிறது.

மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் என்பவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

tirupur-collector-consoles-boy-who-scored-low-mark

அங்கு முதலுதவி சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, சிறப்பு சிகிச்சை பிரிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

மேலும், அங்கு சிகிச்சை பெரும் நோயாளிகளிடம் சென்று சிகிச்சைகள் சரியாக நடக்கிறதா என்று விசாரித்துள்ளார்.

அப்பொழுது அங்கு 10ஆம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்றதால் தற்கொலைக்கு முயற்சித்த சிறுவன் சிகிச்சை பெற்று கொண்டிருந்தார்.

அதனை கண்ட ஆட்சியர் அவரிடம் சென்று பேசினார்.

அறிவுரை

இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அந்த சிறுவனிடம் கூறுகையில், "நாங்கள் 10, 12, கல்லூரிகளில் அரியர் எல்லாம் வைத்துள்ளோம்.

tirupur-collector-consoles-boy-who-scored-low-mark

அதற்கு என்ன செய்வது. இப்போது நல்ல வேலையில் தான் இருக்கிறேன். உங்கள் ஊர் கலெக்டராக போட்டுள்ளார்கள். பாஸ், பெயில் என்பதெல்லாம் கிடையாது.

இதற்கு பின் எப்படி இருக்கிறோம் என்பது தானே முக்கியம். எல்லாம் டெஸ்ட் தானே நமக்கு. ஜாலியாக இருக்க வேண்டும். மார்க் குறைந்ததற்கு தான் இந்த முடிவா? நாங்க எல்லாம் ஃபெயில் ஆகிவிட்டே ஜாலியாக இருக்கிறோம்.

உனக்கு என்ன பிரிவு வேண்டுமோ அதைப் படி. இங்கு விட்டதை 12 ஆம் வகுப்பில் பிடி. இதுக்கெல்லாம் வருத்தப்படக் கூடாது.

12 ஆம் வகுப்பு வந்த உடன் நீயே எனக்கு போன் செய்து எனக்கு சொல்ல வேண்டும்” என்று அறிவுரை வழங்கினார்.

இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.