தூத்துக்குடியில் 144 தடை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Thoothukudi
By Vinothini May 12, 2023 05:25 AM GMT
Report

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்காலிகமான 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலக்குறிச்சியில் வீரசக்கதேவி திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் மே 14 -ம் தேதி காலை 6 மணிவரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

section-144-came-into-effect-in-tuticorin

இது குறித்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஞ்சாலங்குறிச்சியில் இன்று மே-12 மற்றும் 13-ம் தேதிகளில் வீரசக்க தேவி ஆலய திருவிழா நடக்கிறது.

இந்த திருவிழாவை முன்னிட்டு, 14-ம் தேதி காலை 6 மணிவரை மாவட்டம் முழுவதும் 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

ஆலயத் திருவிழாவை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடக்கும்பொருட்டும், சட்டம் ஒழுங்கினை பராமரிக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

தடை உத்தரவு

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், "இதன்படி 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற பகுதிகளில் இருந்தும் வந்து விழாவில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் வாள், சுத்தி, கம்பு போன்ற அபாயகரமான ஆயுதங்களை ஊர்வலமாகக் கொண்டுவருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

section-144-came-into-effect-in-tuticorin

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும், வெளிமாவட்டத்தில் இருந்தும் அனைத்துவகை வாடகை வாகனங்கள் மூலமாக திருவிழாவிற்கு மக்களை அழைத்துவரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி வாகனங்கள், அன்றாட அத்தியாவசிய பொருட்களை கொண்டுசெல்லும் வாகனங்கள் , சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த நாட்களில் கூட்டங்கள், அன்னதானம், ஊர்வலங்கள் நடத்த இருப்போர் , தூத்துக்குடி எஸ்.பியை அணுகி முன் அனுமதி பெற்று இருக்க வேண்டும்.

மேலும் இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதிச்சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது” என்று தெரிவித்துள்ளார்.