பிராங்கால் நடந்த விபரீதம் - பிறந்த நாளில் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்
கல்லூரி மாணவர் பிறந்த நாளன்று ஆடியோ வெளியிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
கல்லூரி மாணவர்
திருப்பூர் பச்சையப்பன் நகர் முதல் வீதியை சேர்ந்த சத்யநாராயணன் கோவை தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று(04.01.2025) காலை சத்யநாராயணன் நீண்ட நேரம் ஆகியும் தன் அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரின் அறைக்குள் சென்று பார்த்தபோது சத்யநாராயணன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
ஆடியோ
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கத்தி கதறி கூச்சலிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த நல்லூர் காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சத்யநாராயணன் தற்கொலை செய்வதற்கு முன்னர், தனது கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் பேசிய அவர், நான் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். பயமாக இருக்கிறது. ஏதாவது செய்து விடுவார்கள் என்று அச்சமாக இருக்கிறது.
இடைநீக்கம்
இனி எப்படி நான் கல்லூரிக்கு செல்வேன். எனக்கு அன்னைக்கு அவன் போன் செய்து மிரட்டியதிலிருந்து மிகவும் பயமாக இருப்பதோடு இரவு தூங்கவே முடியவில்லை. எனக்கு அதே ஞாபகமாக இருக்கும் நிலையில் மீண்டும் என்னை மிரட்டினால் நான் என்ன செய்வேன் என்று கதறி அழுதுள்ளார்
கல்லூரி மாணவர்கள் சிலர் சத்யநாராயணனை பிராங்க் என்ற பெயரில் போன் செய்து கிண்டல் செய்தது செய்ததாகவும், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் 15 நாட்கள் இடைநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050.