புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்காத தோழி - விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவி
தோழி புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்காத சோகத்தில் கல்லூரி மாணவி விபரீத முடிவெடுத்துள்ளார்.
கல்லூரி மாணவி
ஆந்திரா மாநிலத்தில் திப்பம்மா, பெல்லாரியில் உள்ள கல்லூரி ஒன்றில் 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் பெற்றோரை இழந்த இவர் அதன் பிறகு ஊரக வளர்ச்சி அறக்கட்டளையின் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
புத்தாண்டு வாழ்த்து
விடுதியில் திப்பமாவுக்கு நெருங்கிய தோழி ஒருவர் இருந்துள்ளார். சில நாட்களுக்கு முன் இருவருக்குமிடையே ஏற்பட்ட சிறிய பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்று முதல் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
எப்படியும் புத்தாண்டுக்கு தனக்கு வாழ்த்து தெரிவிப்பார் அப்போது முதல் பேசிக்கொள்ளலாம் என திப்பமா தோழியின் வாழ்த்தை எதிர்பார்த்து காத்திருந்துள்ளார். ஆனால் தோழி அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்காத போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
விபரீத முடிவு
மேலும், தனது தோழியிடம் சென்று வாழ்த்து தெரிவிக்காதது குறித்து மீண்டும் வாக்குவாதம் செய்து, மறக்க முடியாத ஒன்றை செய்தால் மோசமான விளைவுகளை சந்திப்பாய் என திப்பம்மா எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து மறுநாள் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்காததால் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050.