தைரியம் இருந்தால் அதை செய் - மனைவி கூறியதால் விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்
விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
டெல்லி தற்கொலை
டெல்லியில் உள்ள கல்யாண் விஹார் பகுதியில் வசித்து வந்தவர் புனீத் குரானா(40). இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு மணிகா ஜெகதீஷ் பஹ்வா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
தம்பதிகள் இருவரும் இணைத்து டெல்லியில் Gods cake bakery மற்றும் woodbox cafe என்ற இரு உணவகங்களை நடத்தி வந்தனர்.
விவாகரத்து வழக்கு
இருவரும் சேர்ந்து தொழிலை நடத்தி வரும் நிலையில் அதை நிர்வகிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில் இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் உள்ள படுக்கையறையில் புனீத் குரானா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த டெல்லி காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்குக் காரணம்
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தற்கொலைக்கு முன்னர் புனித் எழுதிய கடிதம் மற்றும் அவரது மனைவியுடன் பேசிய தொலைபேசி உரையாடல் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
புனித்தின் மனைவி மனிகா பஹ்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை மனரீதியாகச் சித்திரவதை செய்ததே தற்கொலைக்குக் காரணம் என்று புனித் குடும்பம் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
'உன்னால் ஒன்றும் செய்ய முடியாது, தைரியம் இருந்தால் தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டும்’ என்று கூறி புனித்தைத் தற்கொலைக்குத் தூண்டியதாக புனித்தின் சகோதரி தெரிவித்துள்ளார்.
தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050.