பறக்கும் ராசாளியே என வைப் செய்த காதல் ஜோடி!! பாடம் புகட்டிய காவல்துறை
ரீல்ஸ்
இன்றைய 2K கிட்ஸ் அளவின்றி ரீல்ஸ் செய்வதில் மோகம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். சிலவை அதில் கட்டுக்கடங்காமல் போய்வருகிறது. காதலிக்கிறோம் என வெளியில் சொல்லவே பலரும் தயங்கிய காலம் பொய் இப்போதெல்லாம் ஒன்றாகவே ரீல்ஸ் செய்து அலப்பறையில் ஈடுபடுகிறார்கள்.
சிலர் பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்படும் அளவிற்கும் செய்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இளம் காதல் ஜோடி ஒன்று மோட்டார் சைக்கிளில் வாகனம் ஓட்டியபடியே ரொமாண்ட்டிக் ரீல்ஸ்களை பதிவு செய்தனர்.
பைன்
இதில் விஷயமென்னவென்றால், பொண்ணு வண்டி ஓட்ட, பையன் டேங்க் மீது அமர்ந்திருக்கிறார் கன்னத்தை கிள்ளிக்கொண்டே.அதில் ஒன்றும் பிரச்சனையில்லை, அவரவர் விருப்பம். ஆனால், இருவருமே ஹெல்மெட் போடவில்லை.
ரீல்ஸ் மோகம் - 350 அடி உயரத்தில்!! 6 மணி நேர போராட்டம் - இளம் இன்ஸ்டா பிரபலத்திற்கு ஏற்பட்ட அசம்பாவிதம்
சாலை விதிகளையும் மீறி நடந்துகொண்டுள்ளார்கள். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியான நிலையில், சமூகவலைத்தளத்தில் இருக்கும் சமூக போராளிகள் கொந்தளித்து விட்டார்கள். பலரும் கண்டனங்களை தெரிவித்தார்கள்.
திருப்பூர் போலீசார் ஜோடியை கண்டுபிடித்து வாகனத்தின் உரிமையாளர் ராமர் என்பவருக்கும் அப்பெண்ணுற்கு வாகனத்தை ஓட்டக்கொடுத்ததற்காக ரூ.5 ஆயிரம், ஓட்டுனர் உரிமமின்றி வாகனத்தை ஓட்டுதல் மற்றும் தலைக்கவசம் அணியாமல், ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை இயக்கியது என மொத்தமாக ரூபாய் 13,000 அபராதம் விதித்துள்ளனர்.