ரீல்ஸ் மோகம் - 350 அடி உயரத்தில்!! 6 மணி நேர போராட்டம் - இளம் இன்ஸ்டா பிரபலத்திற்கு ஏற்பட்ட அசம்பாவிதம்
மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் 27 வயதான இன்ஸ்டாகிராம் பிரபலம் ஆன்வி கம்தார் என்பவர் வீடியோ எடுக்கும்போது பள்ளத்தாக்கில் விழுந்து மரணமடைந்துள்ளார்.
விபத்து
மும்பையைச் சேர்ந்த chatered accountant'ஆனா ஆன்வி கம்தார் விபத்து நேரிட்டபோது தனது ஏழு நண்பர்களுடன் பயணத்தில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.
இந்த விபத்து தொடர்பாக போலீஸ் தரப்பில் பேசும் போது, ராய்காட்டில் உள்ள மங்கானில் உள்ள புகழ்பெற்ற கும்பே நீர்வீழ்ச்சியின் அருகே 300 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் வீடியோ எடுக்கும் போது கம்தார் தவறி விழுந்து மரணமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்தாரின் நண்பர்கள் எச்சரித்ததன் பேரில் காவல்துறையினரும் உள்ளூர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்புப்பணிகள் துரிதப்படுத்தபோதும், சுமார் 300 அடி பள்ளத்தில் அவர் விழுந்ததன் காரணமாக, பெறும் போராட்டத்திற்கு பிறகே அவர் மீட்கப்பட்டிருக்கிறார்.
மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
கம்தார் ரீல்ஸ் செய்வதில் பிரபலமாக இருந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 2,50,000க்கும் மேற்பட்ட followers இருந்துள்ளார்கள்.