லைக்ஸ்காக உயிரை பணயம் வைத்த ஜோடி!! பொறிவைத்து தூக்கிய போலீஸ்!
பாழடைந்த கோயில் கட்டிடத்தின் மீது ரீல்ஸ் செய்து ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்ததற்காக ஒரு இளம் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது
அவர்கள் மிஹிர் காந்தி(27) மற்றும் அவரது தோழி மினாக்ஷி சலுங்கே(23) என தகவல் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில் அவர்கள் இருந்த ரீல் எடுத்த மூன்றாவது நபர் தலைமறைவாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
கைது செய்த பாரதி வித்யாபீட் காவல் நிலையத்தின் அதிகாரி ஒருவர் இது குறித்து பேசும் போது, வீடியோ குறித்து தகவல் கிடைத்ததும், நாங்கள் விசாரணைகளை ஆரம்பித்து அவர்களைக் கண்டுபிடித்தோம். அவர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்தே கைது செய்தோம்.
கைதான இருவர் மீதும் IPC பிரிவு 336 மற்றும் பிறவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களுக்கு ஆறு மாதங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் சிறிய குற்றம் என்பதால், அவர்கள் காவலில் வைக்கப்பட மாட்டார்கள் என்று அதிகாரி தெரிவித்தார்.
ஆபத்தான ரீல்ஸ்
பாழடைந்த கோயில் கூரையின் மீது துணிச்சலான நிகழ்வை செய்து அதனை வீடியோவாக வெளியிட்டார்கள் இந்த ஜோடி. கோவில் கூரையின் ஓரத்தில் காந்தி படுத்திருப்பதையும், அவரின் தோழி சலுங்கே கீழே இறங்கி, கையைப் பிடித்துக் கொண்டும், குறைந்தபட்சம் 10 மாடிக் கட்டிடத்திற்குச் சமமான உயரத்தில் இருந்து நடுவானில் தொங்குவதும் காணப்பட்டது.
இருப்பினும், ஆறு மாதங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் சிறிய குற்றம் என்பதால், அவர்கள் காவலில் வைக்கப்பட மாட்டார்கள் என்று பாட்டீல் கூறினார்.