தமிழ் எழுதப் படிக்க தெரிஞ்சா போதும்; அரசு வேலை, 50 ஆயிரம் சம்பளம் - நோட் பண்ணுங்க!
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் பணியிடங்கள் காலியாகவுள்ளது.
இரவுக்காவலர்
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாகவுள்ள இரவுக்காவலர் பணியிடத்திற்கு டிசம்பர் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
கூடுதலாக மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 15,700/- (15,700 - 50,000). பட்டியலின மக்கள், பட்டியலின அருந்ததியர்., பட்டியல் பழங்குடியினர் 18 முதல் 37 வயது வரையும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிறப்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர் 34 வயது வரையும், பொது பிரிவினர் 32 வயது வரையும் இருக்க வேண்டும்.
தகுதி
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை tiruppur.nic.in இணையதளத்திலும் தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதளத்திலும் (National career service portal - www.ncs.gov.in) பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும்.